உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 3 – மெக்சிகோவின் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 33 ஆக அதிகரிப்பு – 2017ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கம்

 

மெக்சிகோவின்  தெற்கு கடல்பகுதியில் இன்று  ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  கடந்த ஒரு நூற்றாண்டில் தங்கள் நாட்டில் நடந்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று அதனை  அந்நாட்டு அதிபர் விவரித்துள்ளார்.

மெக்சிகோ, குவாட்டமாலா, எல் சால்வடோர், கோஸ்டா ரிக்கா, நிகரகுவா, பனாமா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   வெள்ளிக்கிழமை அதிகாலை 04.50க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது    சுமார் ஒரு நிமிட நேரம் நீடித்தததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுமார் 5 கோடி பேர் அந்நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அதிபர் என்ரிக் பினா நியேடோ கூறியுள்ளார்.

மெக்சிகோவின் தெற்குப் பகுதியிலும், குவாட்டமாலாவின் மேற்குப் பகுதியிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து மெக்சிகோவின் சியாபாஸ் மாகாணத்தின் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

2017ஆம் ஆண்டில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கம் இதுதான் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவையில் பதிவான நிலநடுக்கத்தைவிட இது மூன்று மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது

இணைப்பு 2 -மெக்சிகோவில்  8.1 அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை – இரு குழந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு

Sep 8, 2017 @ 07:48

மெக்சிகோவின்  தெற்கு கடல்பகுதியில் இன்று கடுமையான  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது   ரிக்டர் அளவு கோலில் 8.1 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில்  ஒரு குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் இருவா்      நிலநடுக்கம் காரணமாக    காற்றோட்டம் நின்றதனால் உயிரிழந்ததாகவும் ஏனைய மூவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிஜிஜியாபன் நகரில் இருந்து தென்மேற்கே சுமார்123 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடையில் சுமார் 33 கிலோமீட்டர் ஆழத்தில்   இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக வீடுகள் பாடசாலைகள், வைத்தியசாலைகள்  என்பன சேதமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது  .

இந்த   நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படுதவதற்கான சாத்தியச்கூறுகள் காணப்படுவதாகவும்    பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்  விடுத்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *