இலங்கை

இணைப்பு 2 – வெளிவிவகார அமைச்சர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றுள்ள  வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இன்று  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து  இருதரப்பு பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டுள்ளார். முன்னதாக  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈஈபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் இந்தியாவிற்கு  பயணம்

Sep 9, 2017 @ 03:30

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இந்தியாவிற்கு பயணம்செய்துள்ளார். இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு நேற்று அமைச்சர் மாரப்பன இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர்  இன்றைய தினம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்திக்க உள்ள நிலையில் இரு தரப்பு உறவுகள் தொடர்பில்  கலந்துரையாடப்பட உள்ளது.

திலக் மாரப்பன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க உள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசமும் இந்த பயணத்தில்  இணைந்து கொண்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *