இலங்கை

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்பட வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அல்லது சரக்குகளை போக்குவரத்துச் செய்யும் முச்சக்கர வண்டிகளில் கட்டாயம் மீற்றர் பொருத்தப்பட வேண்டுமென  அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயண முடிவின் பின்னர் முச்சக்கர வண்டி சாரதிகள் பற்றுச் சீட்டுக்களை வழங்க வேண்டியது கட்டாயப்படுத்தும் வகையில் வர்த்தமானி  அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயண தூரம், வாகன பதிவிலக்கம், கட்டணத் தொகை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி இந்த பற்றுச்சீட்டு வழங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *