இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து

குளோபல் தமிழ் செய்தியாளர்
கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பாடசாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தமையால் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தீயை அணைத்து விபத்துப் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் பல லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன. மஹிந்தோதயா ஆய்வுகூடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகச்வின் ஆட்சிக் காலத்தில் பாடசாலைகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *