இலங்கை பிரதான செய்திகள்

முல்லைத்தீவு பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முல்லைத்தீவு பேருந்து நிலையத்தை அமைப்பதற்கு மாவட்டச் செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தின் பொது அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.  முல்லைத்தீவு பேருந்து நிலையம் தனது சொந்தக் காணியில் தற்காலிக கொட்டகைகளில் இயங்கி வருகின்றது. நகரத்திற்கு வரும் மக்கள் மழை, வெயில் காலங்களில் பலத்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.

1990 ஆம் ஆண்டின் பின்னர் முல்லைத்தீவு நகரம் போரினாலும் ஆழிப்பேரலையினாலும் பேரழிவுகளைக் கண்ட நிலையில் முல்லைத்தீவு நகரத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பேரூந்து நிலையத்தினை நிரந்தர கட்டடமாக மாற்றுவதற்கான வழிகள் இதுவரை உருவாக்கப்படவில்லை எனவும் இதற்கான முயற்சிகளை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் இணைந்து  மேற்கொள்ள வேண்டும் என பொது அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

தற்போது மாவட்டத்திற்குள்ளும் வெளியிடங்களுக்கும் அடிப்படை வசதிகள் குறைந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தே பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *