விளையாட்டு

தென் ஆபிரிக்காவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளின் அணித் தலைவராக பாஃப் டூ பிளெஸ்ஸிஸ் தெரிவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் ஆபிரிக்காவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளுக்கான அணித் தலைவராக பாஃப் டூ பிளெஸ்ஸிஸ்   ( Faf du Plessis  )தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான அணித் தலைவராக இதுவரையில் ஏபி டி வில்லியர்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் டுவன்ரி20 அணியின் தலைவராக  கடமையாற்றி வருகின் பாஃப் டூ பிளெஸ்ஸிஸ்   கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் டெஸ்ட் அணியையும்   வழிநடத்தி வருகின்றார். 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான தென் ஆபிரிக்க அணியை வழிநடத்தும் பொறுப்பு பாஃப் டூ பிளெஸ்ஸிசுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *