உலகம் பிரதான செய்திகள்

ரொகிங்யா இனத்தவர்கள் விவகாரத்தில் மியன்மார் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு சீனா ஆதரவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரொகிங்யா இனத்தவர்கள் விவகாரத்தில் சீனா மியன்மார் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. ரொகிங்யா இனத்தவர்கள் தொடர்பான விவகாரத்தில் ஸ்திரதன்மையை பாதுகாப்பதற்காக மியன்மார் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை ஆதரிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

மியன்மார் தனது தேசிய அபிவிருத்தியை பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளிற்கு சர்வதேச சமூகம் தனது ஆதரவை வழங்கவேண்டும் என சீனா கருதுகின்றது என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். மியன்மாரின் ரகைன் மாநிலத்தில் இடம்பெற்ற வன்முறை தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா போன்று சீனாவும் மியன்மார் அரசாங்கம் தீவிரவாதத்திலிருந்து தனது நாட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்ற நிலைப்பாட்டை பி;ன்பற்றுவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் அரச ஊடகங்கள் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை எதிர்நோக்கியுள்ள அங் சாங்சூச்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *