இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர்:-

இன்று ஒரே நாளில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆற்றில் மூழ்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று 60 பேரை ஏற்றிச் சென்ற படகு யமுனை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மீட்கப்பட்ட 12 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன ஏனையோரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே போன்று பீகாரிலும் இன்று காலை படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பீகாரில் மராஞ்சி பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் ஏற்பட்ட இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *