விளையாட்டு

உலக அணியை வீழ்த்தி டுவன்ரி20 தொடரை வென்றது பாகிஸ்தான்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக அணியை வீழ்த்தி, டுவன்ரி20 போட்டித் தொடரை பாகிஸ்தான்  அணி கைப்பற்றியுள்ளது.  மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பாகிஸ்தான் வென்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய உலக பதினொருவர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

 இதில், அஹம் செஷாட் 86 ஓட்டங்களையும், பாபர் அசாம் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக பதினொருவர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில், டேவிட் மில்லர் மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன்படி பாகிஸ்தான்  அணி இந்தப் போட்டியில் 33 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *