இலங்கை பிரதான செய்திகள்

குர்ஹாம் செய்க் கொலை வழக்கு மீள் விசாரணைக் கோரிக்கை நிராகரிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய பிரஜை குர்ஹாம் செய்க் கொலை வழக்கு மீள் விசாரணை குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதான பத்திரன மற்றும் மூன்று பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனுவில்  வேறு நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனுவை மீள் விசாரணை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.  கடந்த 2011ம் ஆண்டு குர்ஹாம் செய்க் படுகொலை செய்யப்பட்டதுடன் அவரது ரஸ்ய காதலி பாலியல் பலத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு தாக்கப்பட்டிருந்தார்.

இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *