உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் பாரிய வாகன விபத்து நால்வர் பலி:-

பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். லொறி மோட்டார் சைக்கிள் உட்பட பல வாகனங்கள் மோதுண்ட இந்தப் பகுதியின் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

விபத்து நடந்த M5 நெடுஞ்சாலை நீண்ட நேரமாக மூடப்பட்டு இருந்தது. வேறுபாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் வாகன ஓட்டுனர்களிடம் கேட்டுருந்தனர். பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் J15 J14க்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து நடந்திருப்பதாகவும் பல வாகனங்கள் இதில் தொடர்பு பட்டு இருப்பதாகவும் தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்துக் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *