இலங்கை பிரதான செய்திகள்

யாழ். மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காவாக பராமரிக்கப்பட வேண்டுமென தீர்மானம்


யாழ். மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிக்கப்பட வேண்டுமென தீர்மானமொன்று, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று  நிறைவேற்றப்பட்டுள்ளது.  வட மாகாண முதலமைச்சர்    சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற  அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இதற்கான பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முன்மொழிந்தார்.

எனினும், குறித்த காணிகளில் இராணுவம் தற்போது நிலைகொண்டுள்ளதனால்  குறித்த பிரேரணையை நிறைவேற்ற முடியாதெனவும் , இராணுவம் வெளியேறிய பின்னர் அது குறித்து   முடிவு எடுக்கப்படும் எனவும் சுட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்   மாவீரர் துயிலும் இல்லங்களின் காணிகளை அடையாளம் கண்டு, பிரதேச சபைகளிடம் அவற்றை ஒப்படைத்த பின்னர் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *