இந்தியா பிரதான செய்திகள்

உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்


இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம் இருப்பதாகவும், இதற்கு உணவு பற்றாக்குறை காரணம் அல்ல எனவும்  யுனிசெப் தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு இல்லா இந்தியாவை உருவாக்குவது எனும் கருப்பொருளில்  டெல்லியில் நடைபெற்ற  தேசிய   கருத்தரங்கில்  உரையாற்றிய  யுனிசெப்பின்  இந்திய பிரதிநிதி யாஸ்மின் அலி ஹேக்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.   உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் உள்ளனர் எனவும் இது கவலை தரும் விஷயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டில் மாற்றம் வந்தபோதிலும், இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது எனத் தெரிவித்த அவர்  ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு உணவு பற்றாக்குறை காரணம் அல்ல என தெரிவித்துள்ளார்..  குழந்தைகளின் வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்தக் கூடிய சில பழைய பழக்கவழக்கங்கள், சில சமயங்களில் தாய்ப்பால் ஊட்டுவது தாமதமாவதால் பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *