இந்தியா பிரதான செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற சாமியாரின் ஆசிரமத்தில் 600 மனித எலும்பு கூடுகள் புதைக்கப்பட்டுள்ளன


பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைதாகி சிறையில் இருக்கும் ராம்ரகீம் சிங் சாமியாரின்  ஆசிரமத்தில் 600 மனித எலும்பு கூடுகள் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.    ராம்ரகீம் சிங்கிடம் சாரதியாக  இருந்த கட்டாசிங்  என்பவர் தற்போது சாமியாருக்கு எதிராக மாறியுள்ள நிலையில் இந்த தகவல்களை புலனாய்வு பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

சாமியாருக்கு எதிராக செயல்படுவோரை கொன்று புதைத்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவினர் இதுசம்மந்தமாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பில்   ஆசிரமத்தின் சிரேஸ்ட துணைத்தலைவர் பி.ஆர். நாயனிடம் விசாரணை நடத்திய போது 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆச்சிரமத்தின்   ஒரு இடத்தில் சுமார் 600 பேரின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருப்பதாக அவர்  காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆசிரமத்தில் உடல்களை புதைத்தால் அவர்கள் மோட்சத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் இருப்பதாகவும், எனவே இறந்தவர்களின் உறவினர்களே உடல்களை இங்கு புதைக்க சொன்னதாகவும் அவர் கூறினார். இவர்கள் அனைவருமே இயற்கையாக மரணம் அடைந்தவர்கள் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி விஞ்ஞானி ஒருவர் கொடுத்த ஆலோசனைப்படி உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மரத்தை நட்டிருப்பதாக நாயன்  தெரிவித்துள்ளதுடன்  புதைக்கப்பட்ட 600 பேர் யார், யார் என்ற பட்டியலையும்  காவல்துறையினரிடம்; வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்த விசாரணைகள் ஆம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *