விளையாட்டு

பிரபல குத்துச்சண்டை வீரர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல குத்துச் சண்டை வீரர் அன்ட்ரே வார்ட் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். லைட்வெயிட், ஹெவிவேயிட் குத்துச் சண்டை போட்டிகளில் உலக சம்பியன் பட்டங்களை வென்றுள்ள அமெரிக்க குத்துச் சண்டை வீரர் அன்ட்ரே வார்ட் ஓய்வு பெற்றுக்கொள்வதாக  அறிவித்துள்ளார்.

33 வயதான அன்ட்ரே வார்ட் முக்கிய சம்பியன்சிப் போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளார். தமது உடல் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியை இழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமது குடும்பம், கழகம் மற்றும் ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விடயங்களை உரிய வகையில் வழங்க முடியாவிட்டால் போட்டிகளில் பங்கேற்பதில் பயனில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் அன்ட்ரே வார்ட், குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *