உலகம் பிரதான செய்திகள்

ஈரானின் அணுத் திட்டம் குறித்து மீளவும் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது – ஈரானிய ஜனாதிபதி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈரானின் அணுத் திட்டம் குறித்து மீளவும் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானி ( Hassan Rouhani  ) தெரிவித்துள்ளார். ஈரான் அணுத் திட்டம் குறித்து உலக நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டிருந்தன. இந்த உடன்படிக்கையில் மீளவும் திருத்தங்களை செய்யவோ மீளமைக்கவோ முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருந்தமை  இந்த ஈரானிய அணுத் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ராம்ப் அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்ட உரையில் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ஈரான் அணுத் திட்ட உடன்படிக்கையை திருத்தி அமைக்க முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஈரானிய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *