உலகம் பிரதான செய்திகள்

சிரிய எதிர்க்கட்சி செயற்பாட்டாளரும் ஊடகவியலாளரான மகளும் கொலை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிரிய எதிர்க்கட்சி செயற்பாட்டாளரும், ஊடகவியலாளரான அவரது மகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரின் சடலங்களும் தலைநகர் இஸ்தான்புல்லில் மீட்கப்பட்டுள்ளது.

60 வயதான  ஒரேயுபா பரகற்( Orouba Barakat   ) மற்றும் 22 வயதான ஹல்லா (  Halla ) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிரிய அரசாங்கத்திற்கு எதிராக ஒரேயுபா கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் தாக்கப்பட்டு கொலை  செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *