இந்தியா பிரதான செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்களை தடுக்க எல்லையில் இந்திய படையதிகாரிகள் மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர்:-

A group of Rohingya refugees walk on the muddy road after travelling over the Bangladesh-Myanmar border in Teknaf, Bangladesh, September 1, 2017. REUTERS/Mohammad Ponir Hossain

ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசிலிருந்து இந்தியாவுக்குள் வருவதனை தடுப்பதற்காக எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையதிகாரிகள் மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் ராக்கைன் மாகாணத்தில ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அங்கிருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேசில் தஞ்சமடைந்துள்ளனர். இந்தநிலையில் பங்களதேசிலிருந்து இருந்து இந்தியாவுக்குள் நுழைய ரோஹிங்கியா அகதிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்தநிலையில் அகதிகள் என்ற போர்வையில் பாகிஸ்தானின் . உளவாளிகளும், ஐ.எஸ். தீவிரவாதிகளும் இந்தியாவுக்குள் ஊடுருவ எல்லையில் காத்திருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் மேற்குவங்கத்துக்குள் ஊடுருவ முயற்சிக்கின்ற அகதிகளை தடுக்க மிளகாய் பொடியை பயன்படுத்தி வருகின் றனர். மேலும் உருவ தோற்றத்தில் அகதிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ஆயுதங்களால் அகதிகளுக்கு காயம் ஏற்படாமல் இருக்க இவ்வாறு மிளகாய்தூள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *