இலங்கை பிரதான செய்திகள்

திலீபனின் இறுதி நாள் – நல்லூரில் உணர்வுபூர்வ அஞ்சலி – முன்னாள் போராளி திலீபனின் நினைவிடத்தினை நோக்கி தூக்கு காவடி – வீடியோ இணைப்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தியாக தீபம் திலீ­ப­னின் 30ஆம் ஆண்டு நினை­வேந்­த­லின் இறுதி நாள் நிகழ்­வு­கள் இன்று நல்­லூர் ஆலய பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள நினை­வி­டத்­தில் இடம்பெற்றது. அதேவேளை முன்னாள் போராளி ஒருவர் கைதடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்திற்கு தூக்கு காவடி எடுத்து வந்திருந்தார்.

அதேவேளை இன்றைய நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராஜா , ஈ. சரவணபவன் , ஆகியோரும் வடமாகாண சபை உறுப்பினர்கள் , ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி , பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *