இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் நிறைவு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  யாழ்ப்பாணம்

vetha

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள்  மேற் கொண்ட போராட்டம்  நிறைவுக்கு வந்துள்ளது.
நண்பகல் 12 மணியளவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த மாணவர்கள் தம்து கோரிக்கைகள் உள்ளிடங்கி மகஜரை யாழ் அரச அதிபர் வேதநாயகனிடம் ஒப்படைத்துள்ளனர்.

img_2803

யாழ்.பல்கலைகழக மாணவர்களின் போராட்டம் தீவிர தன்மையை அடைந்துள்ளது.

Oct 24, 2016 @ 07:58

img_2110
யாழ்.பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி இன்றைய தினம் காலை முதல் யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
தற்போது மாணவர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை காலை முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அப்பகுதியில் சீருடையணிந்த பொலிஸார் எவரும் கடமையில் இல்லை.
அதேநேரம் சிவில் உடையில் பொலிசார் உட்பட பெருமளவான புலனாய்வாளர்கள் போராட்ட சூழலில் காணப்படுகின்றனர்.
img_2111img_2112 img_2113

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *