விளையாட்டு

சுனில் கவாஸ்ககருக்கு அமெரிக்காவில் கௌரவம்


இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரான சுனில் கவாஸ்கரின் பெயர்  அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு சூட்டப்பட்டுள்;ளது.   இந்த மைதானம்  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளது. வெளிநாடுகளில் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் டாரன் சாமி ஆகிய இருவரின் பெயர்களில் மட்டுமே மைதானங்கள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக கவாஸ்கரின் பெயரில் சூட்டப்பட்டுள்ளது.

தன் பெயரை மைதானத்திற்கு வைப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்த   கவாஸ்கர்    இவ்வாறு  விளையாட்டுத்துறைக்காக தங்களை அர்ப்பணிப்பவர்களை கௌரவிக்கும் விதமாக    பல மைதானங்கள்  அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் 125 டெஸ்ட் போட்டியில் விளையாடி  10122 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன்     108 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3092 ஓட்டங்களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *