உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவை வேவுபார்த்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவை  வேவுபார்த்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 65வயது பெண்மணியொருவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அரச ஓப்பந்தக்காரராக பணியாற்றி வந்த பெண்மணியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். லண்டனின் வடக்கில் உள்ள முகவரியொன்றில் வசித்து வந்த இந்த பெண்மணி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஸ்கொட்லாந்யார்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தகவல்களை ஏனையவர்களிற்கு வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறிப்பிட்ட பெண்மணி கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அரச ஓப்பந்தக்காரர் பணி தொடர்பாக உரையாடுவதற்காக சந்தேகநபரை அழைத்த பின்னர் அவரை கைதுசெய்துள்ளோம் எனவும் புலனாய்வு தகவல்களின் அடிபபடையிலேயே கைது செய்துள்ளோம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *