இலங்கை பிரதான செய்திகள்

தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவால் கிளிநொச்சி மாணவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

குளோபல்தமிழ்ச் செய்தியாளர்

கணணி கற்கைநெறி பூர்த்தி  செய்த மாணவர்களிற்கு சான்றிதள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. லண்டன் கற்பக விநாயகர் ஆலய அறக்கட்டளையின்நிதி  அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இலவச கணணி கற்கைநெறி இடம்பெற்று  வந்தது.

குறித்த கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் இடம்பெற்றது.  விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை அடுத்து மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. குறித்த நிகழ்வில் தென்னிந்திய திலைப்பட இயக்குனர்; பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், பா உ சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து பயிற்சியை முடித்த 130 மாணவர்களிற்கு சான்றிதழ்கள் இயக்குனர் பாரதிராஜாவினால்  வழங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *