இலங்கை பிரதான செய்திகள்

நிதிக் கொள்கைகளை கடுமையாக்க வேண்டுமென இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நிதிக் கொள்கைகளை கடுமையாக்க வேண்டுமென இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜாவூ லீ  (Jaewoo Lee )  தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிகள் குழுவொன்று இலங்கைக்கு பயணம் செய்திருந்தது.

பேண்தகு  அபிவிருத்தி நகர்வதற்கு இலங்கையின் நிதிக் கொள்கைகள் உரிய முறையில் வகுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிதி முகாமைத்துவ விவகாரங்களில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய அரச நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *