விளையாட்டு

சிம்பாப்வேயில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன


 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிம்பாப்வேயில் இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  மேற்கிந்திய தீவுகள்அணி சிம்பாப்வே அணியை எதிர்த்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னர் சிம்பாப்வேயில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் புவாலியுவில் இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

எதிர்வரும் 21ம் திகதி முதலாம் டெஸ்ட் போட்டியிலும், 29ம் திகதி இரண்டாம் டெஸ்ட் போட்டியும் நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்றுக்கொண்ட பிரன்டன் டெய்லர் மற்றும் கயில் ஜர்விஸ் ஆகியோரும் இந்த போட்டித் தொடரில் சிம்பாப்வே அணியின் சார்பில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *