இலங்கை பிரதான செய்திகள்

சட்ட உதவி அலுவலகம் யாழில் திறந்து வைப்பு:


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஆரோக்கியமான வேலைச்சூழல் மற்றும் பால்நிலை சமத்துவத்தை மேம்படுத்தல் என்ற சட்ட உதவி அலுவலகம் நேற்று திங்கட்கிழமை யாழில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் மற்றும் சொலிடாரிடி நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் அலோன்சோ சசோன் ஆகியோர் இணைந்து அந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்

இந்த நிறுவனத்தின் ஊடாக தொழிலாளர் உரிமை, பணியிடங்களில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்ய முடியும்.  குறித்த முறைப்பாடுகளின் பிரகாரம் முறைப்பாட்டாளருக்கு தேவையான சட்ட ஆலோசணைகள் , உதவிகள் இலவசமாக வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டது.

முறைப்பாடுகளை இல. 33 கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியிலுள்ள அலுவலகத்திலோ அல்லது  021-221-4444 என்ற தொலைபேசி ஊடாகவோ முன்வைக்க முடியும்.

திறப்பு விழா நிகழ்வில், அரச தலைவர் சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்,  பிரதேச செயலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *