இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் 5 கோடியே 95 லட்சத்து 88,000 வாக்காளர்கள் :

தமிழ்நாட்டில் மொத்தமாக 5 கோடி, 95 லட்சத்து 88,000 வாக்காளர்கள் உள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக  வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், சென்னையில் மொத்தம் 40 லட்சத்து 70,703 வாக்காளர்கள் உள்ளதாகத் தெரிவித்தார். சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகளில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 86,344 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிக வாக்காளர்கள் நிறைந்த தொகுதியாக வேளச்சேரியும், குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக துறைமுகம் தொகுதியும் உள்ளதாக கார்த்திகேயன் தெரிவித்தார்.

வரும் 8 மற்றும் 22ஆம் தேதிகளில் பெயர் திருத்தம் செய்ய, அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறினார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *