உலகம் பிரதான செய்திகள்

தாம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக நைஜீரிய முன்னாள் முதல் பெண்மணி குற்றச்சாட்டு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தாம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக நைஜீரியாவின் முன்னாள் முதல் பெண்மணி பேஸன்ஸ் ஜொனாதன் ( Patience Jonathan ) குற்றம் சுமத்தியுள்ளார். போலியான அடிப்படையில் தமக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும்  நைஜீரியாவின் ஊழல் எதிர்ப்பு முகவர் நிறுவனம் நீதியற்ற முறையில் விசாரணை நடத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தம்மை நெருக்கடிக்குள் ஆழ்த்தவும், அவமானப்பட செய்யவும் இவ்வாறு விசாரணை நடத்தப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேஸன்ஸின் கணவர் குட்லக் ஜொனதன் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தோல்வியடைந்த காரணத்தினால், ஜனாதிபதி பதவியை இழந்தார்.

குட்லக் ஜொனதனின் குடும்பம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *