இலங்கை பிரதான செய்திகள்

தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர் மாநாடு இன்று நடைபெறவுள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தெற்காசிய பாராளுமன்ற உறுப்பினர் மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாக உள்ளது. கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாக உள்ளது. தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் மக்களுக்கு இடையில் நட்புறவையும் பரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சார்க் நாடுகளின் சபாநாயகர்களது மாநாடு 1995ம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைiமையில் தெற்காசிய பிராந்திய வலய பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாக உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *