இந்தியா பிரதான செய்திகள்

கோத்ரா கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி


கோத்ரா கலவரம் தொடர்பாக இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பெப்ரவரி  27ம்திகதி  கோத்ரா புகையிரத  நிலையத்தில் நின்ற புகையிரதத்துக்கு  ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 58 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயங்கர கலவரம் வெடித்தது.

இந்த கலவரங்களில் சுமார் 1044 பேர் உயிரிழந்ததுடன்  2500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த கலவரத்தின்போது கொலை, கொள்ளை, பாலியல்வன்முறை  என பல அசாம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன.  இது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த கலவர வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தநிலையில், கோத்ரா கலவரத்தில் பெரும் சதி இருந்ததாகவும், அதன் பின்னணியில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடிக்கு பங்கு உள்ளது எனவும் சாகியா ஜாப்ரி என்பவர் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, கோத்ரா கலவரத்தில் பெரும் சதி ஏதும் இல்லை என கூறி மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *