இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

இணைப்பு 3 – சிறுவர் இல்ல சிறாா்களை தாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மகா தேவா சைவ சிறாா் இல்லச் சிறாா்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிறுவா் இல்லத்தில் உள்ள இளைஞனுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிட்டுள்ளதோடு, நீதிமன்றம் சிறுவா் இல்ல நிர்வாகிகளையும் கடுமையாக எச்சரித்துள்ளது.

கிளிநொச்சி மகா தேவா சைவ சிறாா் இல்ல சிறுவா்கள் சித்திரவதைக்கு உள்ளானதாக கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி சிறுவா் நன்நடத்தை அதிகாரிகள் குறித்த சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டனா் என்ற சந்தேகத்தில் ஜந்து சிறுவா்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுமதித்திருந்தனர்.

இந்த நிலைல் நேற்று திங்கள் கிழமை இந்த வழக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளபட்ட நிலையில் சிறுவா் இல்லத்தில் இருக்கின்ற இளைஞனை விளக்க மறியில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இல்லத்தின் நிர்வாகிகளையும் கடுமையாக எச்சரித்துள்ளது. அத்தோடு மாவட்ட சிறுவா் நன்நடத்தை அதிகாரிகளை சென்று சிறுவா்களின் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தர பிறப்பித்துள்ளது.

இணைப்பு 2 – கிளிநொச்சி  சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான  ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு  அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனா்

குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர்  மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும்  உட்காயங்கள் இருப்பதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. எனவே சட்ட மருத்துவ  அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இன்று குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் சென்று இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில்   தனக்கு நிகழ்ந்து சித்திரவதை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தமையினை தொடர்ந்தே குறித்த விடயம் வெளியில்  தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே அதிகாரிகளால் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவா்கள்  சித்திரவதைக்குள்ளான சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன் இடம்பெற்றது எனத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை சிறுவா்கள் வெளியில் தெரிவிக்க அச்சமடைந்து காணப்படுகின்றனா் எனவும் எனவேதான் அவர்களை  சிறுவா் இல்லத்திலிருந்து வெளியே எடுத்து வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

குறித்த சிறுவர் இல்லத்தில் யுத்தத்தில் தாய், தந்தை, பெற்றோர்களை இழந்த சிறுவா்களும், சிறுமிகளும், மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட சிறுவர்களும் உள்ளனா். போரினால் ஏற்பட்ட பல்வேறு உளவியல்  தாக்கங்களுக்கு உள்ளான சிறுவா்கள் தங்களின் நிலைமையினை கருதி சிறுவா் இல்லங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கும் அவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *