இலங்கை பிரதான செய்திகள்

விமானப்படையினர் புதிய ரக விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளனர்


குளோபல் தமிழ் செய்தியாளர்

இலங்கை விமானப்படையினர் புதிய ரக விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளனர். தாக்குதல் விமானங்கள், பயணிகள் விமானங்கள் இவ்வாறு கொள்வனவு செய்யப்பட உள்ளன. சுமார் பதினெட்டு புதிய விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குருப் கப்டன் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய விமானங்கள் பதிலீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சில வகை விமானங்களை பழுதுபார்ப்பதற்கு உதிரிபாகங்கள் கொள்வனவு செய்ய வேண்டுமெனவும் அதற்கான செலவு மிக அதிகம் என்பதனால் புதிய விமானங்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கடற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் தற்போது விமானங்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *