இலங்கை பிரதான செய்திகள்

கூழாமுறிப்பு கிராம மக்களுடன் வடக்கு அமைச்சர் கலந்துரையாடல்:-

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள கூழாமுறிப்பு கிராமத்தின் பொதுமக்களை வடக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் நேற்று சந்தித்திருந்தார்.

ஏற்கனவே கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக மாகாண சபை உறுப்பினர் நிதியில் இருந்து நிறைவேற்றப்பட்ட உதவித் திட்டங்களுக்கான நன்றியினை தெரிவித்திருந்த மக்கள், தற்போதைய காலகட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அமைச்சர்முன் வைத்திருந்தனர்.

கிராமத்தின் உட்பாதைகளை சீரமைத்தல், பாடசாலை மைதானத்தை சீர்படுத்துதல், மாலைநேர வகுப்புகளின்மை, வைபவங்களுக்கு பயன்படுத்தக்கூடிய பந்தல் கதிரைகள் இன்மை காரணமாக எதிர்கொள்ளும் நெருக்கடிகள், வாழ்வாதார உதவித் திட்டங்களின் தேவைகள், புதிய தொழில் முயற்சிகளுக்கான உதவி என்பன போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

அனைத்தையும் கேட்டறிந்த அமைச்சர், தீர்வு காணக்கூடிய விடயங்களை இனம் கண்டு அதற்கான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதுடன், ஏனைய பிரச்சினைகளை உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *