இலங்கை பிரதான செய்திகள்

சபாநாயகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு விஜயம்

geneva
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

சபாநாயகர் உள்ளிட்ட பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு விஜயம் களில் பங்கேற்பதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா  செல்ல உள்ளது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறப்பினர்களான வேலு குமார், வித ஹேரத், ரோஹினி குமாரி விஜேரட்ன ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களாக கடமையாற்றிய ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், ரீ.மகேஸ்வரன், த.மு தசாநாயக்க ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி போன்றன குறித்து இந்த அமர்வுகளின் போது கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த சம்பவங்கள்; தொடர்பிலான விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தொடர்பில் இலங்கைப் பிரதிநிதிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *