இலங்கை பிரதான செய்திகள்

நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட எட்டுப் பேருக்கு பிணை

 

பராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இ டி.வீ. சானக்க, பிரசன்ன ரணவீர  உள்ளிட்ட எட்டுப் பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போது     இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில், ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில், இவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இணைப்பு 2 – நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில்

Oct 11, 2017 @ 03:18

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நாமல் ராஜபக்ஸ, டி.வீ. சானக்க, பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் மூன்று பேர் இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மத்தள விமான நிலையமும் ஹம்பாந்தோட்டை துறைமுகமும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நாமல்     ராஜபக்ஸ உட்பட 6 பேர் கைது

Oct 10, 2017 @ 18:18

ஹம்பாந்தோட்டையில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக   நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட 6 பேர் இன்று செவ்வாய்கிழமை இரவு   கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரி.பி.சாணக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருடன் தென் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிக்கார, சம்பத் அத்துக்கோறள மற்றும் மேஜர் அஜித் பிரசன்ன ஆகியோரும் அடங்குகின்றனர்.

மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து   கடந்த வெள்ளிக்கிழமை  நீதிமன்ற தடையை மீறி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *