இலங்கை பிரதான செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில்:-

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

12 மாணவர்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சயிட்டம் நிறுவனத்திற்கு எதிரான பேரணி ஒன்று நேற்று விஹாரமகாதேவி பூங்காவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குறித்த பேரணி கொள்ளுப்பிட்டி சந்தியை அடைந்த போது, ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்தநிலையில் அப் பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து குறித்த மாணவர்கள் காயமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *