இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதிகள் தற்காலிக சீரமைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா  செலவில்  கடந்த அரசினால் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால்  நாளை மறுதினம் 14 ஆம் திகதி  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளது

ஜனாதிபதி செல்லுகின்ற பிரதான பாதைக்கு அருகில் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ள குறுக்கு வீதிகள் கிரவல் இடப்பட்டு தற்காலிகமாக செப்பனிடப்படுகின்றது. கடந்த ஆட்சிகாலங்களில்  ஜனாதிபதியின் வருகையின் போது  அவசர அவசரமாக வீதிகள் செப்பனிடப்படுவது போல் இவ் ஆட்சிக்காலங்களிலும்  தொடர்கின்றது என மக்கள் தெரிவிக்கின்றனர்

தற்போது மேற்கொள்ளப்படுகின்ற பணிகள் ஜனாதிபதியின் வருகைக்காக குறுகிய காலம் நிலைத்திருக்க கூடிய வகையில் மேற்கொள்ளப்படுகின்றைமையும் சுட்டிக்காட்டத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *