இலங்கை பிரதான செய்திகள்

வடக்கு கிழக்கில் பௌத்த அழிப்பு மேற்கொள்ளப்படுகின்றது – ஹெல பொது சவிய

child-laugh
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பௌத்த அழிப்பு மேற்கொள்ளப்படுவதாக ஹெல பொது சவிய என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில் நல்லிணக்கம் காணப்படுவதாக கூறப்பட்ட போதிலும் வடக்கு கிழக்கில் பௌத்த அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் அமைந்துள்ள விஹாரை அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.

சில தரப்பினர் அந்தக் காணிகளை மீட்டு எடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள அமைப்பு பௌத்தர்கள் எல்லா நேரங்களிலும் நல்லிணக்கத்தை பாதுகாக்க முயற்சிக்கின்றார்கள் எனவும் அது கோழைத்தனமன்று எனவும் ஹெல பொது சவிய அமைப்பு தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *