இலங்கை

புரிந்துணர்வுடன் செயற்படுவோம் – ஜனாதிபதி

maithri3

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

புரிந்துணர்வுடனும் பிணைப்புடனும் செயற்படுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அனைத்து இதயங்களிலும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஒளிரவிடச் செய்வதற்கு திடசங்கல்பத்துடன் இம்முறை தீபவாளி கொண்டாட்டங்களில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்த இருள் நீங்கி ஒளியை நோக்கி பயணிக்கும் பொன்னான சந்தர்ப்பமாக இந்த தருணத்தை அடையாளப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்  அன்யோன்ய புரிந்துணர்வு மற்றும் பிணைப்பு மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து இந்துக்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *