இந்தியா பிரதான செய்திகள்

ஜெயலலிதா கையெழுத்திட முடியாத நிலையில்! தேர்தல் ஆணையகம் ஆதாரம் வெளியிட்டுள்ளது:

jayablacksign-1

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கையெழுத்திட முடியாத நிலையில் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையக ஆவணத்தை ஆதாரம் காட்டி தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தல் நவம்பர் 19ஆம் திகதி நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக வேட்புமனுவில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் கையெழுத்திற்குப் பதிலாக விரலடையாளம் வைக்கப்பட்டுள்ளது. வலது கையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் இருப்பதால் அவரது இடது கை கட்டைவிரலின் பதிவினை பெற்று இருப்பதாக அப்பல்லோ வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

jayablacksign_18361

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *