இலங்கை பிரதான செய்திகள்

ஜிந்தோட்ட வன்முறைக்கு எதிரான கண்டன பிரேரரனை நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒத்திவைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காலி ஜிந்தோட்ட வன்முறையில் பாதிக்கபட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் , வன்முறையாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வடமாகாண சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போது அவைத்தலைவர் ஜிந்தோட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் வன்முறையாளர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் அவசர பிரேரரனை ஒன்றினை முன் வைத்தார்.

மேலும் , இவ்வாறு சிறுபான்மை இனத்திற்கு எதிராக தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படும் , திட்டமிட்ட வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு சட்டம் ஒழுங்கு சம்பந்தபப்ட்ட அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியும் சிறுபான்மையினரை இலக்கு வைத்து வன்முறை சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்க கூடாது என அவைத்தலைவர் தெரிவித்தார்.

அதற்கு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறித்த வன்முறை சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது அதற்கான காரணம் என்ன என்பதனை அறியாது நாம் பிரேரணையை கொண்டுவர முடியாது என கருத்துக்களை தெரிவித்தனர்.

இருந்த போதிலும் அவைத்தலைவர் தனது பிரேரணையை சபையில் நிறைவேற்றுவதற்கு கடும் பிராயத்தனங்களை மேற்கொண்டார்.

சுமார் 30 நிமிடங்கள் நீண்ட விவாதத்தின் இறுதியில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த பிரேரணையை அடுத்த அமர்வில் எடுத்து கொள்வோம். என கேட்டுக்கொண்டதை அடுத்து அதற்கு அவைத்தலைவர் சம்மதித்து , பிரேரணையை ஒத்திவைத்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply