இலங்கை பிரதான செய்திகள்

துவிச்சக்கர வண்டிகளை களவாடிய சந்தேகத்தில் நால்வர் கைது:-

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு முன்பாக நிறுத்தப்படும் துவிச்சக்கர வண்டிகளை களவாடிய சந்தேகத்தில் நால்வர் கைது செய்யபப்ட்டு உள்ளனர். போதனா வைத்திய சாலைக்கு முன்பாக விடப்படும் துவிச்சகர வண்டிகள் தொடர்ந்து ஒரு குழுவினால் திருடப்பட்டு வந்துள்ளன.

அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை துவிச்சக்கர வண்டிகளை திருட முற்பட்ட இருவரை அங்கு நின்றவர்கள் கையும் மெய்யுமா பிடித்தனர். அவர்கள் இருவரையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் அங்கிருந்தவர்கள் ஒப்படைத்தனர்.

அந்த சம்பவம் நடைபெற்று சில மணிநேரத்தில் வேறு இருவர் போதனா வைத்திய சாலை முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த துவிச்சக்கர வண்டியை திருட முற்பட்ட வேளை அங்கு நின்ற வாடகை கார் சாரதிகள் அதனை அவதானித்து திருடர்களை துரத்தி சென்று பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். யாழ்.பொலிஸ் நிலையத்தில் குறித்த நான்கு சந்தேக நபர்களையும் தாம் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply