இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் சூறாவளி ஏற்படும் என்ற தகவல்களில் உண்மையில்லை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் சூறாவளி காற்று வீசும் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் பாரியளவில் சூறாவளி காற்று மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும் என வெளிநாட்டு நிறுவனங்களினால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இந்த தகவல்களில் உண்மையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தல் தொடர்பில் மக்கள் பீதியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுசா வர்னசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பாகங்களிலும் வளிமண்டலவியல் ஆய்வு நிறுவனங்கள் மாறுபட்ட முறைகளைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தி வருவதாகவும் இந்த முறைகள் எல்லா நாடுகளுக்கும் பொருத்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply