இலங்கை பிரதான செய்திகள்

கைது செய்வதனை தடுக்குமாறு கோரி கோதபாய மனுத் தாக்கல்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கைது செய்வதனை தடுக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தம்மை கைது செய்ய முயற்சிக்கப்படுவதாக கூறி அதனை தடுக்குமாறு கோரி இவ்வாறு மனுத் தாக்கல் செய்துள்ளார். 90 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தார் எனத் தெரிவித்து ராஜபக்ஸவை கைது செய்ய முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கோதபாயவை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தடுத்துள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply