இலங்கை பிரதான செய்திகள்

தேயிலை பயிருக்கு பதிலீடாக வேறும் செய்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – பிரதமர்

Ranil_wickramasinghe_2_CI
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

தேயிலை பயிருக்கு பதிலீடாக வேறும் செய்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைப் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ள அவர் தெற்கில் கைத்தொழில் மயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படத் தொடங்கியதும் ஊழியப்படை தெற்கு நோக்கி நகரும் என தெரிவித்துள்ளார்.

தேயிலைத் துறையை சிறந்த முறையில் மேம்படுத்த வேண்டும் எனவும் அல்லது தேயிலை செய்கையை கைவிட்டு விட்டு, அதனை விட பொருளாதார ரீதியில் நன்மை தரக்கூடிய வேறும் பயிர்கள் பயிரிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த காலங்களைப் போன்று தேயிலைக்கு கிராக்கி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *