இந்தியா பிரதான செய்திகள்

சென்னை கடற்கரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் உயிரிழந்தநிலையில் கரை ஒதுங்கியுள்ளமை குறித்து சந்தேகம்


சென்னை கடலில்   பல வகை மீன்கள் அதிகளவில்  உயிரிழந்தநிலையில்  கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில்  மீனவர்கள் அச்சத்தில்  வெளியிட்டுள்ளனர்.   சென்னை பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் முகத்துவாரம் பகுதியில் இன்று காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள்  இவ்வாறு   கரை ஒதுங்கியுள்ளன.

கடற்கரையோரத்தில்  சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த இந்த மீன்கள்  மிதக்கின்றன எனவும்   இரசாயனம் கலந்த கூவம் நீர் கடலில் கலந்ததால் மீன்கள் இறந்;துள்ளனவா  அல்லது சுனாமி அறிகுறியா என அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மீன்பிடித்துறை  அமைச்சு இதுதொடர்பில்  உடனடியாக தலையிட்டு  உயிரிழந்த  மீன்களை அப்புறப்படுத்தி நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும்  மீன்கள் உயிரிழந்தமை  குறித்த காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துர்ள்ளனர்.

இதே போல் சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடல் முகத்துவார பகுதியிலும் இன்று ஏராளமான மீன்கள் இறந்தநிலையில் மிதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply