இலங்கை பிரதான செய்திகள்

11 இளைஞர்கள் கடத்தல் – குற்றப் புலனாய்வுப் பிரிவு கோரும் தகவல்களை வழங்க கடற்படைத் தளபதிக்கு உத்தரவு..

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரும் தகவல்களை வழங்குமாறு கடற் படைத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தை கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

கடற்படை லெப்டினன் கேணல் பிரசாத் ஹெட்டியாரச்சியின் கீழ் கடயைமாற்றிய கடற்படை உத்தியோகத்தர்கள் பற்றிய விபரங்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரியுள்ளனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் உரிய தகவல்களை வழங்குமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பீ தஸநாயக்க உள்ளிட்ட ஏழு பேரின் விளக்க மறியல் காலத்தை டிசபர் மாதம் 13ம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply