இலங்கை பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் வாபஸ்?


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:-

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொகுதி நிர்ணயம் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஒரு தொகுதியினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனுக்கள் காரணமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த மனுக்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்றில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply