இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலைகழக நிர்வாக செயற்பாட்டை முடக்கி போராட்டம்.

img_2306

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யாழ். பல்கலைகழக மாணவர்கள் , பல்கலைகழக நிர்வாக செயற்பாட்டை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 20ம் திகதி நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பல்கலைகழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இரு மாணவர்கள்  உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்கலைகழக கல்வி செயற்பாடுகள் முடங்கி காணப்பட்டது. இந் நிலையில் இன்றைய தினம் முதல். மாணவர்கள் பல்கலை கழக நிர்வாக செயற்பாட்டை முடக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை பல்கலைகழகத்திற்கு முன்பாக கூடிய மாணவர்கள் நிர்வாக உத்தியோகஸ்தர்கள் எவரையும் பல்கலைகழகத்தினுள் உள் நுழைய விடாது வாயில் கதவினை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

img_2304 img_2305

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *