இந்தியா பிரதான செய்திகள்

விளம்பர பதாதைகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

 

கோவையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பதாதைகளையும்  உடனே அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோவையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பல பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ‘கட்அவுட்’, பதாதைகள்  மற்றும் அலங்கார வளைவுகள் வைத்துள்ளனர்.

இந்தநிலையில்   அலங்கார வளைவு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற   ரகு என்பவர்  மோதி கீழே விழுந்துள்ள நிலையில்   அவ்வழியாக வந்த பாரவூர்தி   அவர் மீது ஏறியதில்  அவர் உயிரிழந்தார். இது தொடர்பில் தொடரப்பட்ட  பொதுநல வழக்கு   விசாரணயின் முடிவிலேயே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

, நெறிமுறை இல்லாமல் பல இடங்களில் பதாதைகள் , கட்அவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளமை காரணமாக   ரகு விபத்தில் சிக்கி  உயிரிழந்திருக்கலாம் எனத் தோன்றுவதாக   சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், கோவையில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பதாதைகளையும்  உடனே அகற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அனுமதி பெற்ற பதாதைகளாக இருந்தாலும், அவை விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இருந்தால், அவற்றையும் அகற்ற வேண்டும் எனவும்  விபத்தில் பலியான ரகுவின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply